மேலூர் அருகே பரவும் மர்ம காய்ச்சல்- பீதியில் மக்கள்

மதுரை அருகே அதி வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே குழிசேவல்பட்டி கிராமத்தில் கடந்த 3 தினங்களுக்கு மேலாக மர்மகாய்ச்சல் பரவி வருகின்றது. இது குழந்தை , பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் பாதித்துள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பால் கைகால் வீக்கம், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அருகிலுள்ள கீழவளவு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நாள்தோறும் படையெடுத்து வருகின்றனர்.

அங்குள்ள குளங்களில் தேங்கும் கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மர்மகாய்ச்சல் பரவுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உடனடியாக மருத்துவமுகாம் அமைத்து தங்களது கிராமத்தில் சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழிசேவல்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>