சபரிமலை பிரச்னை- குமாரசாமி வேண்டுகோள்
சபரிமலை பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலைக்கு வரும் பெண்களை இந்து அமைப்புகள், ஐயப்பா சேவா சங்கத்தினர் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். எதிர்பாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டது. இதனால் இரு தரப்பு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.
இதனை தொடர்ந்து சபரிமலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி, “சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது. இந்த பிரச்சினையை அரசியலாக்க கூடாது” என்று வலியுறுத்தி உள்ளார்.