அமெரிக்க அதிபரின் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். இவரது மனைவி மெலனியா டிரம்ப், அதிபர் மாளிகையில் வசிப்பவர்களுக்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெலனியா டிரம்ப் பிலடெல்பியா மாகாணம் செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறினார்.
அவர் ஏறிய, சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்திலேயே தரையிறக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டார்.
இயந்திர கோளாறு காரணமாக புகை ஏற்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.