இன்றைய (18.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்தநாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும். பல நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். பழைய வாகனத்தை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்ட திட்டம் நிறைவேறும்.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, திருமண காரியம் கைகூடும். புது வீடு மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வரும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து வெகுவாக உயரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும்.
கடகம்:கடக ராசி நேயர்களே, குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். சுற்றியிருப்பவர்களின் உண்மையான சுயரூபத்தை புரிந்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனதில் ஏற்பட்ட கவலை நீங்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
கன்னி:கன்னி ராசி நேயர்களே, மன அமைதி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மிகவும் உயர்வாக நடத்தப்படுவீர்கள். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்:துலாம் ராசி நேயர்களே, ஆன்மிகப் ஆர்வம் கூடும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னைகள் ஓரளவு குறையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும். மற்றவர்கள் உங்களுக்கு சாதகமாக பேச தொடங்குவர். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் மரியாதைக் கூடும்.
தனுசு: தனுசு ராசி நேயர்களே, ஓயாத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சி ஒன்று நடக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
மகரம்:மகர ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். முக்கிய வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பணம் வரவு எதிர்பார்த்ததை விட சற்று குறைவாக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கும்பம்:கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் பல வகையில் நன்மை கிடைக்கும். மனைவிவழியில் சுப செய்தி உண்டு. உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:மீன ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். தூரத்து உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை ஆதரிப்பர்.