வக்கர புத்தியுடைய பெண்களின் எண்ணம்தான் மீடூ - பொன்.ராதாகிருஷ்ணன்
மீடூ(#Metoo) புகாரால் இந்தியாவில் முதல் முறையாக ஒரு அமைச்சர் பதவிய விலகியதை தொடர்ந்து பெண்களுக்கு எதிராண கருத்துகளை கூறிவுள்ளார் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களை போலவே ஆண்களும் குறை சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் மீடூ (Metoo) என்பது வக்கர புத்தியுடைய பெண்களின் எண்ணம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மீதான மக்களின் நம்பிக்கையை அழிக்க யாருக்கும் உரிமை கிடையாது என கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் அத்தியூரில் நலவாழ்வு மையத்தை அவர் தொடங்கி வைத்தார். அங்கு பெண்களுக்கு உணவு பரிமாறிய பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கென்று சில விதிமுறைகள், பாரம்பரியத்தை மக்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.