தமிழ் ராக்கர்ஸ்ல வட சென்னை இன்னும் சில நிமிடங்களில் சண்டக்கோழி2!

தமிழ்ராக்கர்ஸுக்கு எதிராக எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டார் விஷால். ஆனால்  விஷால் பேசியதை சிறிதும் சட்டை செய்யாமல் வடசென்னை படத்தை தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டனர்.

65 கோடி பட்ஜெட்டில் மூன்று ஆண்டுகால கடின உழைப்பில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தும் வட சென்னை படத்தை நேற்றே திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டது தமிழ்ராக்கர்ஸ். படங்களை திருட்டுத்தனமாக பிரிண்ட் எடுக்க உதவும் தியேட்டர்களை கட்டம் கட்டியும் விஷால் கோஷ்டியின் பாச்சா பலிக்கவில்லை.

தமிழ்ராக்கர்ஸ்க்கு மற்றவர்களை விட விஷால் மீது சற்றே பாசம் அதிகம் என்பதால் அவரது ‘சண்டக்கோழி2’ இன்னும் சில நிமிடங்களில் அதே இணையதளத்தில் வெளியாகும் என்பதை 100 சதவிகிதம் நம்பலாம். அடுத்து மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து கழுத்து நரம்புகள் தெறிக்க சவால் விட்டுவிட்டு அடுத்த படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவார் விஷால்.

More News >>