சீதக்காதி திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

'நடுவுலக் கொஞ்சம் பக்கத்தை காணோம்' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர்  தரணிதரன் அவர்கள். தற்போது அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடித்துவருகிறார். இப்படத்தின் பெயர்  'சீதக்காதி'. அதோடு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் 25வது திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இவர்களுடன் காயத்ரி சங்கர், பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பேஷன ஸ்டுடியோ தயாரித்துள்ளது. கோவிந்த வசந்தா இசையமைத்து பாடல்களுக்கு மெருகூட்டியுள்ளார்.

அண்மையில் விஜய் சேதுபதியின் முதியவர் கதாபாத்திரத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வில்லை ஏந்தியடிப பழங்கால மன்னர் போன்ற தோன்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டரை பார்க்கும் போது படம் என்ன கதை என்பதை கணிக்கா முடியாத வகையில் உள்ளது. புதுமையாகவும் தெரிகிறது.

More News >>