சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என குருசாமி தற்கொலை!

சபரி மலையில் பெண்கள் அனுமதிப்பதை எதிர்த்து போராடிய கேரளாவை சேர்ந்த குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெருத்த போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை சபரிமலை நடைத்திறப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குருசாமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு 85 வயது நிரம்பியவர் கேரளா பந்தலூரை சேர்ந்த இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார,இவருடைய பக்தி மற்றும் பல ஆண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்கு தவறாமல் சென்று வருவதால் இவரை குருசாமி என்றே அனைத்து பக்தர்களாலும் அழைக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரி மலை தீர்ப்பு வந்த உடன் இதற்கு எதிராக குரல் கொடுத்து பல மீடியாக்களில் இவரது முகம் பரீட்சியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று பெண்கள் சபரி மலை கோவிலுக்கு செல்ல முயன்ற சம்பவத்தை பார்த்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதன் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திக் கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவரது சர்ட் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் இதுதான் என் கடைசி நாள். அந்த கோவிலின் கதவுகள் திறக்கும் முன் நான் இந்த உலகைவிட்டு சென்றுவிட வேண்டும் என எழுதிவிட்டு அவர் சொன்னபடியே இந்த உலகை விட்டு பிரிந்து சென்று உள்ளார்.குருசாமியின் மறைவு கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News >>