ஒரே பொருளுக்கு வெளியே ஒரு விலை தியேட்டர்களில் ஒரு விலையைத் தடுக்க விதிமாற்றம்
ஒரே பொருளுக்கு தியேட்டர்களில் ஒரு விலை...வெளியே ஒரு விலை வைத்து விற்பதைத் தடுக்கும் வகையில், விதியில் சில மாற்றங்களைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜனவரி மாதம் முதல்,. தியேட்டர்கள் உணவுப் பண்டங்களுக்கு அதிக விலை வைத்து விற்க முடியாது
தியேட்டரில் பிரபல குடிநீர் நிறுவனத்தின் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.50-க்கு விற்பனை செய்ப்படுகிறது. அந்த பாட்டிலிலும் ரூ. 50 என எம்.ஆர்.பி விலை அச்சிடப்பட்டுள்ளது. வெளியே கடைகளில் அதே குடிநீர் பாட்டில் ரூ.20 என விற்பனையாகிறது. ஒரே பொருளுக்கு வெளியே ஒரு விலை தியேட்டரில் ஒரு விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு விற்பனை செய்பவர்களைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லாத நிலையில் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாது. இதையடுத்து,, சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011-ல் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் வரும் 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகிறது. இதனால், பொருள்களுக்கு அதிக விலை வைத்து விற்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்பட்டுள்ளத
கடந்த 2015ம் ஆண்டு, தியேட்டர்களுக்கு மக்கள் குடிநீர் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் , “பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் இருந்து கொண்டுவரும் குடிநீர் பாட்டிலை தியேட்டர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியென்றால் சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இல்லையென்றால், சேவைக் குறைபாடு காரணமாக திரையரங்குகள் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்” என்று உத்தரவிட்டது. ஆனால், எந்த தியேட்டரும் பொதுமக்களுக்கு நல்லத் தரமானக் குடிநீரை வழங்க முன்வருவதில்லை.