புத்தாண்டு கொண்டாட்டம்... சென்னையில் 170-க்கும் மேற்பட்டோர் காயம்
சென்னையின் பல்வேறு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்துகளில் 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், கேக் வெட்டியும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த கொண்டாட்டத்திற்கு இடையே சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை, ராஜீவ் காந்தி, கீழ்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்ட அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.