நவம்பரில் வெளிவருகிறது அடங்கமறு !
ஜெயம் ரவியின் அடங்கமறு படம் வரும் நவம்பர் மாதமே ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டிக்டிக் படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி இயக்குநர் கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடித்து வரும் ‘அடங்கமறு’ படம் நவம்பரில் ரிலீசாக இருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமான ராஷி கண்ணா நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி போகன் படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் கடைசி வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.