இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டின் ஜூன் மாதம் தொடங்கியது. செப்டம்பர் மாதம் வரை ªப்யும் தென்மேற்கு பருவமழை காலம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடித்துள்ளது.

வடமாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில், தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிவுக்கு வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா கூறியதாவது: வெப்பசலனம் மற்றும் மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிந்து, இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட 12 சதவீதம் அதிகம் பெய்யும்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

More News >>