இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு டிரெய்லர் ரிலீஸ் !
விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் பார்ட் 2 போல கவர்ச்சிக்கு சற்றும் பஞ்சமில்லாமல், அடுத்த அடல்ட் காமெடி படமாக இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.
சந்தானத்தின் இனிமே இப்படித்தான் மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களில் நாயகியாக நடித்த ஆஷ்னா ஜாவேரி இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், சிங்கம்புலி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், பூர்ணா மற்றும் வில்லியாக வரும் மியா லியோன் நடித்துள்ளனர். அது என்னடா மியா லியோன் எனக் கேட்போருக்கு, சன்னிலியோனையும், மியா கலிபாவையும் மிக்ஸ் செய்த கவர்ச்சிக் கடல் மியா லியோன் என்பதை படத்தின் டிரெய்லரிலேயே டாப்லெஸ் சீன் வரை வைத்து காண்பித்துள்ளனர்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்திற்கு, ப்ளூசட்டை மாறனை வைத்தே டிரெய்லர் தயார் செய்திருந்தனர். இதில், ஒருபடி மேலே சென்று, ப்ளூசட்டை மாறனின் தமிழ் டாக்கீஸ்லேயே படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். மேலும், ஆனந்தராஜ் படம் முழுவதும் ப்ளூசட்டையிலேயே வருகிறார்.
மியா லியோனுக்கு போட்டியாக நாயகி ஆஷ்னா ஜாவேரியும் கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். சிறு பட்ஜெட் படமாக இருந்தால் நல்ல கதையை தேர்வு செய்யவேண்டும் ஆனால், இப்படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர். முகேஷ் சதைகளை தேர்வு செய்துள்ளார். விமல், ஓவியா நடிப்பில் களவாணி 2 படத்திற்கு காத்திருந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஏமாற்றத்தை தரக்கூடும்.