சர்கார் டீஸர் ரிலீஸ் !
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட டீஸரை சன்பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம் சர்கார். இப்படத்தின் டீஸரை சன்பிக்சர்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது. படத்தின் டீஸர் ரிலீசாவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் கடந்த 2 மணி நேரமாக தியேட்டர்களை நோக்கி முதல் நாள் முதல் காட்சிக்கு செல்வது போல படையெடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மற்றும் கட் அவுட்கள் வைத்து பாலபிஷேகம் என மெர்சல் கிளப்பினர்.
இந்நிலையில், ஷார்ப்பாக மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 24 மணி நேரத்திற்குள் மெர்சல் டீஸர் சாதனைகளை முறியடிக்க விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கிடக்கின்றனர்.
டீஸர் எப்படி இருக்கு?
சி.இ.ஓ. சுந்தர் ராமசாமி கதாபாத்திரத்தில் கார்ப்பரேட் கிரிமினலாக இந்தியா வரும் விஜய், தனது ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை அறிந்து, தமிழக அரசியலில் தலையிடுகிறார். ராதரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் அரசியல்வாதியாக நடித்துள்ளனர். வாக்குச் சாவடியில் பணிபுரியும் நபராக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு ஹவுஸிங் போர்ட் பகுதி வாசியாகவும் விஜய்க்கு உதவும் வலது கரமாக வருகிறார்.
கார்ப்பரேட் கிரிமினல் எப்படி மக்களுக்கு உதவு தலைவனாக மாறி தனது சர்காரை நடத்துகிறார் என்பதே டீஸரில் காட்டப்பட்டுள்ள கதைக்களமாகும்.
உங்க ஊர் தலைவன தேடிபுடிங்க.. இதுதான் நம்ம சர்கார் என விஜய் சொல்வது யாருக்கான பிட் மற்றும் ரஜினிக்கான ரிவீட்டா என்பது தான் புரியவில்லை.