சபரிமலையில் 144 தடை உத்தரவு: மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

கேரளாவில் சபரிமலையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. சபரிமலையின் அடிவாரத்தில் போராட்டம் நடத்தி வரும் அமைப்புகள், பெண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்து வருகிறன்றனர்.

போராட்டம் நாளுக்கு நாள் வலுடைந்து வருவதால், சபரிமலை சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முதல் நடை திறக்கப்பட்டதால் ஆந்திராவை சேர்ந்த பெண் செய்தியாளர் கவிதா மற்றும் சமூக ஆர்வலர் ரஹானா ஆகியோர் கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றனர். ஆனால், போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டங்கள் தொடர்ந்து வருவதால் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீட்டிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூஹ் இன்று மாலை உத்தரவிட்டார்.

More News >>