தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனை போற்றும் 1033-ஆம் ஆண்டு சதயவிழா!

தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜசோழன் அரியணை ஏறிய நாள் தஞ்சாவூரில் மாமன்ன ராஜராஜ சோழனை போற்றிக் கொண்டாடும் 1033ஆம் ஆண்டு சதயவிழா மங்கல இசையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது இன்று  சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது. சோழ மன்னன் ராஜராஜசோழன் கி.பி.985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் முடிசூட்டப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாக சதயவிழா கொண்டாடப்படுகிறது.

1033வது சதயவிழா கொண்டாட்டத்திற்காக ராஜராஜ சோழன் சிலை மற்றும் பெரியகோவிலின் முகப்புப் பகுதியில் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடைபெறும் இந்த விழா தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் அழியாப் புகழ்கொண்ட தமிழ்மன்னர்களின் ஒருவரும், கட்டிடம் மற்றும் சிற்ப கலைகளுக்கு எடுத்துக்காட்டாக தஞ்சையில் பெரியகோயிலைக் கட்டிய பெருமையை உடையவர் ராஜராஜசோழன். இவரது பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் சதய விழா என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 1033 ஆம் ஆண்டு சதய விழா வெள்ளிக்கிழமை மாலை மங்கல இசைக் கச்சேரியுடன் தொடங்கியது.

சோழர் குலத்தின் மாணிக்கம் எனக் குறிப்பிடப்படும் ராஜராஜ சோழனின் 1033 – ஆம் ஆண்டு சதய விழா இன்று தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் துவங்கியது. மேலும் நாளை பெருவுடையார் பெரிய நாயகி திருமேனிகளுக்கு 42 திரவிய அபிஷேகங்கள் நடைபெற இருக்கின்றன. சமீபத்தில் காணாமல் போன 150 கோடி மதிப்புள்ள ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி திருச்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் சதய விழா இது என்பதால் மக்களிடையே இவ்விழா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

பெரிய கோயிலில் தெற்கு பிரகாரத்தில் மேடை அமைக்கப்பட்டு, ராஜராஜசோழனின் பெருமைகளை பறைசாற்றும் சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

சனிக்கிழமையன்று ராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவிக்கிறார். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்படுகிறது. சதய விழாவுக்காக, சனிக்கிழமை நாளை தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>