இன்றைய (20.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, நீங்கள் பக்குவமாகப் பேசும் சுபாவம் உடையவர்கள். நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்ற முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் இருக்கும்.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, காதல் கைகூடி திருமணத்தில் முடியும். உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் தேவைகள் அதிகமாகும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் நன்மை உண்டு. உத்யோகத்தில் அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும்.
கடகம்:கடக ராசி நேயர்களே, பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்பட தொடங்குவர். பழைய வீட்டிற்கு மாற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களை புரியும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பும். நல்ல செய்தி ஒன்று உங்கள் காதில் வந்து விழும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி:கன்னி ராசி நேயர்களே, குடும்ப பாரம் குறையும். விலை மதிக்கத்தக்க பொருட்களை வாங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம்:துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவர். மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, நண்பர்கள் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட பயணங்கள் பலன் தருவதாக அமையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிகளை விரைவாக முடிக்க முடியும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, உங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
மகரம்:மகர ராசி அன்பர்களே, முக்கிய நேரங்களில் அனுபவ அறிவை பயன் படுத்துவது நல்லது. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும்.
கும்பம்:கும்ப தனுசு ராசி நேயர்களே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்ய முடியும். செய்தொழிலில் மேன்மை கிடைக்கும்.
மீனம்:மீன ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகும். மற்றவர்களிடம் பேசும் போது பொறுமையை கடைப்பிடிக்கவும். உடன்பிறப்பு வகையில் சில பிரச்சனைகள் வரக்கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.