த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கம்
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று காலை முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்று 50 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்துள்ளது.
விஜய்சேதுபதியுடன் நடிகை த்ரிஷா இப்படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு, த்ரிஷாவின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு மிக அருமையாக இப்படத்தில் அமைந்துள்ளது.
ஜானு கதாபாத்திரத்தில், த்ரிஷா காட்டும் காதல் உணர்வு ஊறும் சிறு கண்ணசைவுகள் கூட ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது.
ஜானு கதாபாத்திரத்தில் த்ரிஷா அணிந்து வரும் மஞ்சள் நிற குர்த்திக்கு தனியாகவே ரசிகை பட்டாளம் குவிந்து விட்டது. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஆடையாகவும் கடைகளில் அணிவகுத்திருக்கிறது அந்த மஞ்சள் நிற குர்த்தா.
மேலும், பொம்மைகள் மற்றும் பப்ஜி கேம் கதாபாத்திரமாகவும் த்ரிஷா மாறியுள்ளார்.
இந்நிலையில், த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், சரியாகும் வரை யாரும் பதிவிடும் கருத்துகளுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவேண்டாம் எனவும் நடிகை த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார்.