தஞ்சாவூரில், ராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலம்

ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா, தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சோழர்களில் புகழ் பெற்ற மன்னவர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இமயம் முதல் இலங்கை வரை சோழர் ஆட்சியை விரிவுப்படுத்தியவர். கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடிய தஞ்சை பெரிய கோவில் கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். இவரது பிறந்த தினமும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் விழாவாகக் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

1033 வது சதய விழா, மங்கல இசையுடன் தொடங்கி கருத்தரங்கம் பட்டிமன்றம் உள்ளிட்டவை நடந்தது. 2ஆம் நாளான இன்று அரசு சார்பில், தஞ்சை பெரியகோவில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 60 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ராஜராஜசோழன் லோகமாதேவி சிலைகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது

பின்னர், யானை மீது கண்ணாடி பேழையில் உள்ள திருமுறை வீதி உலா, திருமுறை பாடி ஓதுவார்கள் தஞ்சை நகரத்தின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து, தஞ்சை பெருவுடையாருக்கு 42 அபிஷேகமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் சதய விழாக்குழு தலைவர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

More News >>