இதெல்லாம் ஒரு பிரச்சனையா? - முடி கொட்டியதால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தொடர்ந்து முடி கொட்டியதை அடுத்து, விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்த ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் மிதுன் ராஜ்(27). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மிதுனுக்கு நீண்ட நாட்களாக முடி கொட்டும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதற்கிடையில் மிதுனுக்கு அவரது தாயார் பெண் பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து முடி கொட்டும் பிரச்சனையால் தவித்து வந்த மிதுன் புத்தாணடு விடுமுறைக்கா சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தில், மிதுனின் தாயார் கோவிலுக்கு சென்ற நேரத்தில், மிதுன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய தாயார் மிதுன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே மிதுனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முடி கொட்டிய சிறிய பிரச்சனைக்காக ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.