ஆரோக்கியமான கேரட் பர்ஃபி செய்வது எப்படி!

கேரட்டில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது மேலும் கேரட்டில் வைட்டமின் B1, B2, B6, வைட்டமின் K,நார்ச்சத்து,பொட்டாசியம் மற்றும் தயாமின் போன்ற நல்ல உடல்நலத்திற்கு தேவையான வைட்டமின்கள் உள்ளன.

கேரட் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றநோயை குணப்படுத்தக்கூடியது. கண் விழித்திரை திறம்பட செயல்பட வைட்டமின் ஆ உதவுகிறது. வைட்டமின் ஆ குறைவால் மாலைக்கண் நோய் ஏற்படும். இன்னும் பல வகையில் நன்மை தரக்கூடிய கேரட் குழந்தைகள் விரும்பி சாப்பிட செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையானவை:

தேங்காய்த் துருவல் - கால் கப் கேரட் துருவல் - கால் கப் சர்க்கரை - ஒரு கப் ஏலக்காய் - 4 (பொடித்துக் கொள்ளவும்).

செய்முறை:

வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும். கலவை சுருண்டு வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும். சுவையான கேரட் பர்ஃபி ரெடி
More News >>