தாத்தாவின் உடலை எரித்த சாம்பலில் பிஸ்கட்!

அமெரிக்காவின் நார்த் கலிபோர்னியாவில் மாணவர் ஒருவர் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக மாணவர்களுக்குக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

நார்த் கலிபோர்னியாவில் மாநிலத்தில் உள்ள டேவிஸ் நகரில் உள்ள சகிராமென்டோ பகுதியில் உள்ள அரசு நிதிபெறும் டா வின்சி அகாடெமி பள்ளியில் இந்தச்சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்தச்சம்பவம் கடந்த் 4-ம் தேதி நடந்திருந்தாலும் இப்போதுதான் இது குறித்து போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி பால் டோரோசோவ் கூறியதாவது:

டா வின்ஸி அகாடெமியில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரின் தாத்தா இறந்துவிட்டார் அவரின் உடல் எரியூட்டப்பட்டு அந்தச் சாம்பலை எடுத்துவந்த அந்த மாணவர், வீட்டில் பிஸ்கட் தயாரிக்கப்பட்ட மாவிலும், சர்க்கரையிலும் கலந்து பிஸ்கட் தயாரித்துள்ளார். பின்னர் அதை பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வந்து சக மாணவர்களிடம் அளித்துள்ளார்.

தான் வித்தியாசமான முறையில் பிஸ்கட் செய்துள்ளேன், அதை உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதைநம்பி 9-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால், சாப்பிட்ட சிலமாணவர்கள் பிஸ்கட்டில் மனித எலும்புகள் வாசனை இருப்பதாகவும், மணல்போன்று பிஸ்கட் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த மாணவர், தன்னுடைய தாத்தா உடலில் இருந்து எரிக்கப்பட்ட சாம்பலை மாவில் கலந்து செய்யப்பட்ட பிஸ்டக் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், சிலர் வாந்தி எடுத்துள்ளனர். ஆனால், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியில் இருந்து எங்களுக்குப் புகார் வந்ததால் விசாரித்தோம். ஆனால்,எந்த மாணவர்களும் இது குறித்து புகார் கொடுக்க தயாராக இல்லை. எந்தவிதமான அதிகாரப்பூர்வமான புகாரும் இல்லாத போது, நடவடிக்கை எடுக்க இயலாது. மேலும், இவர்கள் அனைவரும் சிறுவர்கள், இவர்களால் கொடுங்குற்றச் செயல் செய்ய இயலாது என நம்புகிறோம்.

ஆனால் எந்த நோக்கத்துக்காக அந்த மாணவர் சாம்பலை பிஸ்கட்டில் கலந்து கொடுத்தார் எனத் தெரியவில்லை. அது குறித்து மட்டும் விசாரித்து வருகிறோம் ஆனால் இது குற்றப்பிரிவிலும் இது வராது என்பதால் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

More News >>