வெறும் காலால் நடப்பது கேவளம் இல்லை பாஸ்!

வெறும் காலில் ஓடுவதும், சிறிது நேரம்  நடப்பதும் இரத்த ஓட்டத்திற்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் மற்றும் மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் முடியும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

நிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணமாக உடலில் உள்ள 70% நீரை விட அதிகம் சுரக்கின்றது. பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள் மூளை, இருதயம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்திற்கு நேரடியாக அழுத்தம் ஏற்படுவதால், அது உடற்செயற்பாட்டை ஊக்குவிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆடம்பரமான காலணிகளை அணிவது சிறந்த பழக்கம் அல்ல. அது பாதத்தின் மேற்பரப்பை பலவீனமாக்கி, அதன் வலு மற்றும் வளையும் தன்மையையும் குறைத்துவிடுகின்றது. செருப்புகள் அணிவது பாதத்தின் இயல்பை கெடுத்துவிடும். இதனால் இடுப்பு வலி, முதுகு தண்டு வலி, மூட்டு வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும்.

வெறும் காலில் நடப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதன் புவியீர்ப்பு விசை காரணமாக உடலில் அதிக வேகமாக இரத்த ஓட்டம் இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருப்பதனால் இதயம் சார்ந்த எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கின்றது. வெறும் காலில் நடைபயிற்சி மேற்கொண்டால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடைகின்றது. மற்றும் அதிகாலை வேளையில் புல்லின் மீது வெறும் காலுடன் நடப்பதனால் கண் பார்வை கூர்மையாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

More News >>