முடக்கத்தான் ரசம் செய்வது எப்படி.?

வாத நோய், மூட்டு வலி போன்ற நோய்ளை குணப்படுத்த முடக்கத்தான் கீரை மிக சிறந்தது. துவையல், சூப் செய்ய நேரமில்லாதவர்கள் ரசம் செய்து சாப்பிடலாம்.

தேவையானப் பொருட்கள்:

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை   - 1 கொத்து

பூண்டு பல் - 4

தக்காளி   - 3

முடக்கத்தான் கீரை   - 1 கட்டு

மிளகு     - அரை டீஸ்பூன்

கொத்தமல்லி தழை   - 1 கைப்பிடி

சீரகம்     - 3 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடியாக்கி சேர்த்து வறுத்து கொண்டு, வேக வைத்த முடக்கத்தான் கீரை மற்றும் தக்காளி கரைசலையும் சேர்க்கவும்.

பிறகு பூண்டு, கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைத்து தேவையான அளவு உப்பை போட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

More News >>