பேட்மிண்டன்- இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் 2018 போட்டியின் பைனலுக்கு இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.
டென்மார்க் நாட்டில் இந்த ஆண்டிற்கான பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில், இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்குடன் மோதினார்.
இந்த போட்டியில், 21-11,21-12 என்ற நேர் செட் கணக்கில் மரிஸ்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சாய்னா நேவால் நுழைந்துள்ளார். வெறும் 30 நிமிடங்களிலேயே முதல் இரண்டு சுற்றுக்களையும் தன் வசமாக மாற்றினார் சாய்னா நேவால்.
நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், தைவான் வீராங்கனை தை சூ யிங்குடன் சாய்னா நேவால் பலப்பரிட்சை செய்யவுள்ளார்.