டெங்கு காய்ச்சலுக்கு 83 பேர் பலி!

நாடு முழுவதும் கடந்த மாதம் வரை டெங்கு காய்ச்சலுக்கு 83 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நடப்பாண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை பெற்று பலர் குணமடந்துள்ளனர். இருப்பினும், ஆங்காங்கே சிலர் உயிரிழந்து வருகின்றனர்.

டெல்லியில் மட்டும் 830 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 3,660 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 35 பேர் இறந்துள்ளனர்.

அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,667 பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 18 பேர் இறந்துள்ளனர். இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 பேரும் மற்ற மாநிலங்களில் ஓரிருவரும் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நோய் தடுப்ப தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

More News >>