மீரட்டில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக கவுன்சிலர்!
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கங்கர்கேதா பகுதியில் மணீஷ் என்ற பாஜக கவுன்சிலரின் ஓட்டலுக்கு பெண் வழக்கறிஞருடன் வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் உணவு பரிமாறுபவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த உணவக உரிமையாளரும் பாஜக கவுன்சிலருமான மணீஷ், அந்த காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி சரமாரியாகத் தாக்கினார்.
உடன் வந்த பெண் வழக்கறிஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களைப் போட்டு உடைத்தார். காவல் உதவி ஆய்வாளரை அடித்த பாஜக கவுன்சிலர் மணீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், காவல் உதவி ஆய்வாளரும், பெண் வழக்கறிஞரும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தாக்கியதாக மணீஷ் தெரிவித்துள்ளார்