திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் பல ஆண்டு காலமாக கட்சியில் தொண்டாற்றி வருகிறார். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான இவர் அவரைவிட மூத்தவர். வயது முதிர்வு, உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படடுள்ளது. இதையடுத்து, அன்பழகனை உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.