தீபாவளி ஸ்பெஷல் : பீட்ருட் ஜாமுன் அல்வா
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை அதோடு பலகாரம்தான் ஞாபகம் வரும். பலகாரம் இல்லா தீபாவளி ஏது. இந்த முறை கொஞ்சம் மாறுதலாக பீட்ருட் ஜாமுன் அல்வா செய்து சாப்பிடுவோம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1 (துருவியது)
குலாப் ஜாமுன் மிக்ஸ் – 4 தே. கரண்டி
காய்ச்சின பால் – 1 கப்
சர்க்கரை – 2/3 கப் (அல்லது தேவையான அளவு)
நெய் – 4 தே. கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி துண்டுகள் – நெய்யில் வறுத்தது சிறிதளவு
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை
ஒரு கனமான பாத்திரத்தில் 2 தே. கரண்டி நெய் விடவும்.
நெய் உருகியதும் அதில் பீட்ருட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
தண்ணீர் சுண்டியதும் காய்ச்சின பால் விட்டு கிளறி வேக விடவும்.
நன்றாக கொதித்து வரும்போது குலாப் ஜாமுன் மிக்ஸ் தூவி நன்றாக கிளறவும்.
பால் சுண்டியதும் சர்க்கரை, 1 தே. கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.
அல்வா சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய், முந்திரி, ஏலக்காய் தூவி கிளறவும்.
நெய் தடவிய கிண்ணத்தில் சேமிக்கவும்.