தெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்ததை அடுத்து, விராட் கோலி தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் களமிறங்கி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று விளையாடியதன் மூலம் 60வது சதத்தை நிறைவு செய்தார்.
அதன்படி, மொத்தம் 386 இன்னிங்ஸில், 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் சதத்தை விளாசி உள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 24 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவு செய்ய பட்டியலில் விராட் கோலி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனால், விராட் கோலியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.