இன்றைய ( 22 .10. 2018)nbsp ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள்.
மேஷம்: மேஷ ராசி நேயர்களே, குடும்பம் கலகலப்பாக இருக்கும். வாழ்க்கை தரும் உயர வழி வகை கிடைக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். தொழில், வியாபாரம் உங்கள் எண்ணம் போல் அமையும்.
ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு உண்டு. விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, குடும்ப வேலையை அக்கறையுடன் செய்வீர்கள். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும்.
கடகம்: கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி: கன்னி ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.
துலாம்: துலாம் ராசி நேயர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேச மாட்டீர்கள். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
தனுசு: தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மகரம்: மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும்.
கும்பம்: கும்ப ராசி நேயர்களே, சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.
மீனம்: மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் பொறுமையாக செயல்படுங்கள். பணவரவில் சின்ன சிக்கல் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்க தொடங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.