பாட்ஷா ரிட்டன்ஸ் மீண்டும் ஆட்டோவில் பயணித்த ரஜினி!

தனது மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு பேரனை அழைத்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோ சவாரி செய்தார்.

90 சதவீதம் அரசியல் பணிகள் நிறைவடைந்துவிட்டன, 2.0 நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. பேட்ட படத்தின் ஷூட்டிங் ஓவர் இப்படி அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு புத்தணர்ச்சி அளித்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினி, நேற்று, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து, பேரனை அழைத்துக் கொண்டு கார் டிரைவர் வராத காரணத்தால், ஆட்டோவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்றுள்ளார். சூப்பர்ஸ்டார் தன்னுடைய ஆட்டோவில் ஏறுகிறாரா என்ற சந்தோஷத்தில் ஆட்டோவை ஓட்டியவர் ஆயுத பூஜைக்கு போட்ட பூஜா பலனை அனுபவித்துள்ளார்.

மேலும், வழியில் ரஜினியை ஆட்டோவில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மகள் வீட்டிற்கு சென்று, பொழுதை கழித்துவிட்டு, மீண்டும் காரில் வீடு திரும்பியுள்ளார் ரஜினி.

பாட்ஷா படத்தில் வரும் ஆயுத பூஜை சீன் நினைவுக்கு வந்ததா அல்லது பேரனின் சின்ன சின்ன ஆசையை தாத்தாவாக சூப்பர்ஸ்டார் நிறைவேற்றி வைத்தாரா என்பது சர்ப்ரைஸ் நிறைந்த சஸ்பென்ஸ்.

 

 

More News >>