வைரமுத்துவை பற்றிய உண்மையை சொன்ன ரஹ்மானின் சகோதரி!
மீ டூ(Mee too) வில் சிக்கி வரும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வைரமுத்துவில் ஆரமிபித்து அர்ஜூன், சிம்பு என இந்த பட்டியல் இப்போது நீண்டு கொண்டே போகிறது.
இதில் சின்மயி வைரமுத்து மீது கொடுத்திருக்கும் புகார் தான் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சின்மயி வைரமுத்து பற்றி வெளிப்படையாக தெரிவித்ததை தொடர்ந்து, பலரும் வைரமுத்து தங்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தனர் அதே சமயம் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பி இருக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஒரு பெண் வைரமுத்து தன்னை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி தன் வலையில் விழ வைக்க முயன்றார் என்று தெரிவித்திருந்தர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றின் போது ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைகானாவிடம் இந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
வைரமுத்து எப்படிப்பட்டவர் என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரைஹானா:
"அவ்வளவு பெரிய மனிதர் பற்றி நான் என்ன சொல்வது? அவர் மீது இது மாதிரியான புகார்கள் ஏற்கனவே வந்திருக்கின்றன, என்னிடமே 3 பேர் இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர்.
வைரமுத்து இப்படிப்பட்டவர் தான் என்பது திரைத்துறையில் பலருக்கும் தெரிந்தது தான். ரஹ்மானுக்கு இதை எல்லாம் பற்றி எதுவும் தெரியாது. இந்த சர்ச்சை வந்த போது கூட ரஹ்மான் என்னிடம் இதெல்லாம் உண்மையா? என்று கேள்வி எழுப்பினார்" என்று ரைஹானா அந்த பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார்.