தாலேலோ பாடி யானையை தூங்க வைத்த பாகன்: வைரலாகும் வீடியோ
கேரளாவின் திருச்சூர் பகுதியில் யானை ஒன்றை தாலாட்டு பாடி பாகன் தூங்க வைத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தாலாட்டு பாடி குழந்தைகளை மட்டுமல்ல முயற்சித்தால் யானையையும் தூங்க வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஸ்ரீ குமார். தொலைக்காட்சிகளில் மிமிகிரி செய்து அசத்தி வரும் ஸ்ரீ குமார் ஆண் யானை ஒன்றை வளர்த்து வருகிறார்.
பாஸ்டின் வினய்சுந்தர் என்று அழைக்கப்படும் அந்த யானை ஒரு சில நாட்களாக சோர்வாக காணப்பட்டது. பாஸ்டினுக்கு ஒய்வு தேவைப்படுவதை உணர்ந்த ஸ்ரீ குமார் யானை அருகே சென்று அமர்ந்தார். தூங்க முடியாமல் இருந்த யானையின் அருகே சென்ற பாகன் பாசமாக யானையை தடவி கொடுத்துக்கொண்டே ஒரு மலையாள பாடல் ஒன்றை பாடினார்.
இதோ அந்த காட்சி ...
இப்படி இந்த பாடலை கேட்டு மயங்கிய பாஸ்டின் மெல்ல தூங்க தொடங்கியது. தாலாட்டு பாடி ஒரு யானையை தூங்க வைத்த முதல் மனிதர் ஸ்ரீ குமார் என்ற புகழுடன் அந்த காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகாமாக பகிரப்பட்டு வருகிறது.