கிளாமரின் உச்சிக்கே செல்லும் சொப்பன சுந்தரிகள் பொதுமக்கள் கண்டனம்!
பழைய பாடல்கள் மற்றும் பழைய படங்களை ஒளிபரப்பி வந்த சன் லைஃப், தற்போது 2.0 அவதாரம் எடுத்துள்ளது. புத்தம் புது பொலிவுடன் புதுமையான நிகழ்ச்சிகளுடன் சன் டிவிக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி பற்றி தான் இப்போது ஹாட் டாக். பிக்பாஸ் போலவே ஒரு வீட்டில், 10 மாடல்களை 3 மாதம் அடைத்து வைத்து, அவர்களின் பேஷன் கனவுகளை தூண்டி மிகப்பெரிய மாடலாக்குவதாக ஷோ நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார்.
பேஷன் டிவியை ஒளிந்து மறைந்து பார்த்த மக்கள் தற்போது, சன் லைஃபில் ஒளிவு மறைவில்லாமல் பேஷன் ஷோ நிகழ்ச்சியை பார்க்கத் துவங்கி விட்டனர்.
ஆனால், இந்த நிகழ்ச்சி கவர்ச்சியில் எல்லை மீறி வருகிறது. நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சன் டிவி தொகுப்பாளினி மற்றும் சொப்பன சுந்தரியின் போட்டியாளரான பவித்ரா, உடலில் ஆடையின்றி வெறும் பழங்களை மட்டுமே வைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இவ்வளவு மோசமாக ஒரு தமிழ் ரியாலிட்டி ஷோ டிவியில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என இந்நிகழ்ச்சிக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.