வித்தியாசமான உருளைக்கிழங்கு பிரட் பிரியாணி
எத்தனையோ வகையான பிரியாணிகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பிரட் வைத்து பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை செய்வது மிகவும் சுலபமானது.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – ஒரு கப்,
புதினா – கைப்பிடியளவு,
கிராம்பு – 2,
பட்டை – ஒரு துண்டு,
ஏலக்காய் – 4,
உருளைக்கிழங்கு – 2 ,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
பொரித்த வெங்காயம் – 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் – கால் கப்,
புதினா இலை – கைப்பிடியளவு,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
அலங்கரிக்க :
பொரித்த பிரட்,
பொரித்த வெங்காயம்,
புதினா இலை – தேவையான அளவு.
செய்முறை :
* உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
* இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.
* பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி ரெடி.