இன்றைய (23.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க முடியும். உத்யோகத்தில் உயர்வு உண்டாகும்.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். புது வாய்ப்புகள் உருவாகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும்.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.
கடகம்:கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது இடங்களில் செல்லும்போது புது நட்பு மலரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும். எதிர்காலம் பற்றிய யோசனை அதிகம் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், மற்றவர்களை அனுசரித்துப் போகவும். உத்யோகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
கன்னி:கன்னி ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். யாரிடத்திலும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும்.
துலாம்:துலாம் ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்துடன் தூரத்து பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். மனக்கவலைகள் நீங்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வகையில் நன்மைகள் உண்டாகும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, புதுமையான அணுகுமுறையால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்பும், பாசமும் அதிகரிக்கும். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
மகரம்:மகர ராசி நேயர்களே குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். கடன் பிரச்சனை வெகுவாக குறைய தொடங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
கும்பம்:கும்ப ராசி நேயர்களே, முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
மீனம்:மீன ராசி நேயர்களே, பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிட்டும். புது வீடு மாற்றம் ஏற்படும். வீட்டில் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.