மீண்டும் ஆணவக்கொலையா? நாமக்கல் அருகே சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாறையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜ், ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் சனிக்கிழமை இரவு காதலியைக் காணச் சென்றுள்ளார்.
ஞாயிறன்று காலை அவரது சடலம் தான் மீட்கப்பட்டது, தர்மராஜ் காதலித்து வந்த பெண்ணின் குடும்பத்தினரே அவரை அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து பெண்ணின் தந்தை முத்துக்குமார், தாய்மாமன்கள் ரமேஷ், சக்திவேல், உறவினர்கள் ஈஸ்வரமூர்த்தி, ரங்கநாதன் ஆகிய 5 பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.