சிபிஐ பிளவுக்கு நரேந்திர மோடியே காரணம் - ராகுல் காந்தி

சிபிஐயில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே கடும் அதிகார மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் பரஸ்பரம் மாறி மாறி ஊழல் புகார்களை கூறிவருவதும் தொடர்கிறது.

இந்நிலையில், லஞ்ச வழக்கில், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனா மீதே சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமருக்கு பிரியமானவரும், கோத்ரா விசாரணை புகழ் குஜராத் ஐபிஎஸ் அதிகாரியும், சிபிஐக்குள் இரண்டாம் நிலை பொறுப்புக்கு ஊடுருவியவருமான அதிகாரி, தற்போது லஞ்சம் பெற்றதாக பிடிபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின், அரசியல் பழிவாங்கலுக்கான கருவியாக சிபிஐ மாற்றப்பட்டிருப்பதாகவும், நசிவின் விளிம்பில் உள்ள சிபிஐ அமைப்பு, உட்பூசலில் ஈடுபட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

More News >>