அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அரியானா மாநிலம் குருகிராம் நகர் ஆர்கடியா மார்க்கெட் பகுதியில் கடந்த 13ம் தேதி நீதிபதியின் மனைவி மற்றும் மகன் துருவ் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புக்காக உடன் இருந்த பாதுகாவலர் திடீரென இருவரையும் துப்பாக்கியால் சுட்டார்.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதியின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த துருவ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூளை சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், துருவ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
பாதுகாப்பு வழங்கவேண்டிய பாதுகாவலரே நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.