ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நாகை, தஞ்சாவூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி-யும், நாகை மாவட்டம் கமலாபுரம் உள்ளிட்ட 2 இடங்களில் வேதாந்தா குழுமமும், ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. அதுவும் கடல் பகுதியில் என்று கூறப்பட்டது.

இதனிடையே, ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, நாகை, தஞ்சாவூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, போராட்டம் நடந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்க வேண்டும்

இதேபோல் தஞ்சாவூர் தலைமை தபால்நிலையம் முன், ஒன்று திரண்ட விவசாயிகள், மத்திய, மாநில அரசைக் கண்டித்து முழுக்கம் எழுப்பினர். விவசாய தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும், தீபாவளி கருணைத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது.

More News >>