வைரமுத்து மீது கடும் நடவடிக்கை தேவை- ஹெச்.ராஜா

சின்மயி விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மீ டு (Metoo) ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து மீது முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார்கள். நடிகைகள் ஸ்ரீரெட்டி, சமந்தா, நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், விஷால் உள்ளிட்டோர் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும், திமுக எம்பி கனிமொழியும் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, சின்மயி விவகாரத்தில், வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயார் ஆண்டாளை பழித்த வைரமுத்து நிம்மதியாக தூங்க முடியாது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கேரள அரசும், மக்கள் மற்றும் இந்துத்துவா விரோத சக்திகள் ஒன்றிணைந்து சபரிமலை புனிதத்தைக் கெடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன. காலங்காலமாக நடைமுறையில் உள்ள மத சடங்கு சம்பிரதாயங்களை மாற்றக் கூடாது. கேரள அரசைக் கண்டித்து வரும் 30ஆம் தேதி யாத்திரை நடைபெற உள்ளது" என ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

More News >>