கஷோகி விவகாரம் சவூதி அரேபியா கூறுவதை நம்பவில்லை- டொனால்டு டிரம்ப்
கடந்த சில வாரங்களாக மாயமாகிய சவூதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் ககோஷி கொலை செய்யப்பட்டு விட்டதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் முடியாட்சி செய்து வரும் மன்னால் சல்மானின் முடியாட்சியை விமர்சித்து, ஜமால் ககோஷி என்ற சவூதி பத்திரிக்கையாளர், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் செய்தி எழுதி வந்தார்.
துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் கஷோகி உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டுள்ள சவூதி அரேபியா இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் பத்திரிக்கையாளர் ககோஷி கொலை செய்யப்பட்டிருந்தால், சவூதி அரசு கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரத்தில் சவூதி அரேபியாவின் விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் சவூதி விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றார் மேலும் அமெரிக்க அதிகாரிகள் துருக்கிக்கும், சவூதிக்கும் சென்று தகவல்களை சேகரித்து வருவதாகவும், விரைவில் புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.