இரவில் தூங்கினால் ஆயிரக்கணக்கில் பரிசு வழங்கும் கம்பெனி!

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42ஆயிரம் வரை ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த திருமணங்களை நடத்தி வைக்கும் கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு ஒன்றை அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும்.

92% இளைஞர்கள் இரவு சரியாக தூங்குவதில்லை சரியாக தூங்காத ஊழியர்களால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்த இப்படிச் ஒரு செய்கிறோம்.” என அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இதற்கான பிரத்யேகமான செயலி தூங்கும் நேரத்தைக் கணக்கிடும். 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் உணவகத்தில் ஆண்டுக்கு 42,000 ரூபாய் வரை (இந்திய மதிப்பில்) சாப்பிட்டுக்கொள்ளலாம் அல்லது பணமாகவே வாங்கிக்கொள்ளலாம்.

தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெரும்பாண்மையான காரணம் பணியிலிருந்து திரும்பிய பிறகும்கூட செல்போனில் பேசுவது, கணினியில் வேலை செய்வது போன்றவற்றில் நேரம் செலவழிவதால் பலருக்கும் தூக்க நேரம் சுருங்கிப்போகிறது. இது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கம். இதற்காக முயற்சி எடுத்த ஜப்பான் நிறுவனத்தை பாராட்டலாம்.

More News >>