ஜொலிக்குது... ஜொலி ஜொலிக்குது..ஆமா பாம்புதான்
பாம்பு என்றால் படையும் நடங்கும் என்று கூறுபவர்கள் ஒரு பக்கம் இருக்க அவற்றை கடவுளாக பாவித்து வழிபடுபவர்களின் கூட்டம் ஒரு பக்கம் இருக்கிறது.
பாம்புகளின் வாழ்க்கையே விசித்திரமானது மற்றும் பல மூடநம்பிக்கைகள் உள்ளடக்கியது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹோல்மக்கி என்ற கிராமத்தில் வசிக்கும் அவினாஷ் என்பவரின் வீட்டு தோட்டத்தில் அதிசயதக்க ஒரு பிரகாசமான பாம்பை பார்த்து அங்குள்ள நாய் தொடர்ந்து குரைத்ததுள்ளது. பிறகு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்க்கையில் ஒரு ஒளிவீசும் நாகத்தை கண்டு பயந்துள்ளனர்.
சாதாரண நாக பாம்பை விட இந்த நாகம் சிகப்பு வண்ணத்தில் ஒளி வீசி பிரகாசமாக ஜொலித்து படமெடுத்து காட்டி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அந்நாகத்திற்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் நம்பி அந்நாக பாம்பின் பக்தர்களாக மாறி வழிபட்டு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரு பக்கம் தெய்வீக நாக பாம்பாக வழிபட்டாலும், மறுபுறம் அது விஷமுடைய நாகம் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஒரு வேலை நாகினி பாம்பா இருக்குமோ?