ராட்சசன்களை பாராட்டிய ரஜினி!
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை ரஜினி பாராட்டியதாக இயக்குநர் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
அதில் ரஜினி, ‘Fantastic, Fantastic, Fantastic’ என பாராட்டியதாக சந்தோஷத்துடன் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர்.
இளம் வயதில் வயோதிக தோற்றம் கொண்ட ஒரு நபரை, சக மாணவர்கள் வெறுப்பேற்றுவதால், அவன் சைக்கோவாக மாறுகிறான்.
சைகோவாக மாறும் அவன், தனது தாய் போல் வேடமிட்டு, மேஜிக் செய்து பள்ளியில் பயிலும் இளம் மாணவிகளை கடத்தி கொடூரமாக கொல்கிறான் அவனை கண்டுபிடித்து வதம் செய்யும் போலீசாக விஷ்ணு விஷால் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பால் மிரட்டியுள்ள படம் தான் ராட்சசன்.
இப்படத்திற்கு பொதுமக்கள் பேராதரவு அளித்து வெற்றிப்படமாக்கினர். பாலிவுட்டிற்கு செல்லவுள்ள இப்படத்தை இயக்குநர் ஷங்கர் முன்னதாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.