இன்றைய (24.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் வரும். உடல் நலம் சீராகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்யோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும்.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, குடும்ப வருமான உயரும். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். புத்தி சாதுரியம் ஏற்படும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் ஏற்படும்.
கடகம்:கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். பல எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க வேண்டிவரும். தொழில், வியாபாரம் சீரான முறையில் செல்லும்.
கன்னிகன்னி ராசி நேயர்களே, எதிலும் நேர்மையாக நடந்து கொள்ள விரும்புவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் உண்டாகும். நேர்த்தியான செயல்களினால் மதிப்பும், மரியாதையும் கூடும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
துலாம்:துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, பணம் சேமிப்பில் கவனம் செலுத்தவும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் மனஅமைதி கிடைக்கும்.
மகரம்:மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பிரச்சனைகள் பேச தீர்க்கவும். கையில் எடுத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கவும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்:கும்ப ராசி நேயர்களே, வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். மனதில் நல்ல சிந்தனைகளை வைக்கவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.
மீனம்:மீனம் ராசி நேயர்களே, புது நட்பு மலரும். சில சமயங்களில் வீண் அலைச்சல், பொருள் நஷ்டம் ஏற்படலாம். நண்பர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.