தமிழக மீனவர்கள் 5 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மீனவர்கள் 5 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
நெடுந்தீவு கடற்பகுதியில் நாகை மாவட்டம் புஷ்பவனம் அருகேயுள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நேற்று முன்தினம காலை நாட்டுப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன், 5 நாகை மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்திற்கு கொன்று சென்றனர்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த செல்வம், பழனி, சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரையும் இலங்கை கடற்படையினர் விசகு படகுடன் 5 பேரையும் கைது செய்தனர்.
கைதான தமிழக மீனவர்கள் 5 பேரை அக்டோபர் 30ம் தேதி வரை யாழ்ப்பானம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக மீனவர்கள் 5 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.