சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் வெளியிட்டுள்ளார்.
காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக எந்த அப்டேட்ஸும் இல்லாமல் சைலன்டாக இருந்த சந்தானம், தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் 2ம் பாகம் ரெடியாகியுள்ள விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் வெளியான தில்லுக்கு துட்டு படம் சந்தானத்திற்கு நல்ல கலெக்ஷன் மற்றும் புகழை அள்ளித் தந்தது. அதற்கு அடுத்த சந்தானம் நடித்த படங்கள் சரிவர போகவில்லை.
சர்வர் சுந்தரம் படமோ மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில், தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 29ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக சந்தானம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் சந்தானம் பாழடைந்த ஒரு வீட்டின் கதவை திறக்க வீட்டினுள் நான்கு பெண் பேய்கள் இருக்கின்றன. முதல் பாகத்திலேயே பேய்களை வச்சி செய்த சந்தானம், இந்த பாகத்தில் இன்னும் காமெடியில் கலக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.