ராஜஸ்தானில் வரதட்சனைக்காக மருமகள்களை விற்ற மாமியார்
ராஜஸ்தானில், மருமகள்கள் வரதட்சனை கொடுக்காததால் இருவரையும் ரூ.150 லட்சத்திற்கு விற்ற மாமியாரின் கீழ்த்தரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் நிர்மலா. இவரது சகோதரி சர்மிளா. இருவரும், மும்பையை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, மாமியார் இரண்டு மருமகள்களிடம் இருந்து வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.
ஆனால், நிர்மலா, சர்மிளா ஆகியோர் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால், மேலும் ரூ.4 லட்சம் வேண்டும் என்று மீண்டும் மாமியார் கெடுமைப்படுத்தி உள்ளார். ஆனால், நிர்மலா, சர்மிளா ஆகியோருக்கு மாமியார் கேட்ட பணத்தொகையை கொடுக்க முடியவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த மாமியார் இரண்டு மருமகள்களையும் நபர் ஒருவரிடம் ரூ.150 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதுகுறித்து தெரியவந்த சகோதரிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து தப்பித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் மாமியார், மாமனார், கணவர்கள் உள்பட மகாராஷ்டிராவை சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.